1922 கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு, கோவை சிறையில்
இருந்தபோது ‘குடி அரசு’ எனும் இதழைத் தொடங்கத்
திட்டமிட்டார். திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத்
தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆதிதிராவிடர்களை
கோவிலுக்குள் வழிபாடுசெய்ய அனுமதிக்க வேண்டும் என்னும்
தீர்மானத்தையும் முன்மொழிந்தார். தீர்மானங்கள்
ஏற்கப்படவில்லை. சினமுற்ற பெரியார் மனுதர்ம
சாஸ்திரத்தையும் இராமாயணத்தையும் தீயிட்டுக் கொளுத்த
வேண்டும் என்று முழங்கினார்.
1923 சேலம், மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற
காங்கிரஸ் மாநாடுகளில் வகுப்புரிமைத் தீர்மானத்தை
முன்மொழிந்தார். நிறைவேற்ற இயலவில்லை.
1924 கேரளத்தில் வைக்கம் கோவில் வீதியில் தாழ்த்தப்பட்டோர் நடக்க
உரிமை கோரி, தீண்டாமையொழிப்புப் போர் நடத்தி இருமுறை
சிறை சென்ற பெரியார் இறுதியில் வெற்றி பெற்று ‘வைக்கம் வீரர்’
என்று புகழப்பட்டார். வ.வே.சு. அய்யரால் நிறுவப்பட்ட
சேரமாதேவி குருகுலத்தில் நிலவிய ஜாதி வேறுபாட்டை
எதிர்த்துக் கிளர்ச்சி செய்து, அக்குருகுலம் தானே ஒழியும்படி
செய்தார். திருவண்ணாமலை காங்கிரஸ் மாநாட்டில், தானே
தலைவராயிருந்து வகுப்புரிமைத் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
தீர்மானம் தோல்வியுற்றது. நீதிக் கட்சி ஆட்சியின் இந்து
அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை ஆதரித்துப் பிரச்சாரம்
செய்தார்.
1925 ‘குடிஅரசு’ வார இதழை ஈரோட்டில் 02.05.1925 இல் தொடங்கினார்.
‘குடிஅரசு’ பத்திரிகாலயத்தை திருப்பாதிரிப்புலியூர் ஞானியார்
அடிகள் திறந்து வைத்தார். காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில்
வகுப்புரிமைத் தீர்மானத்தை முன்மொழிந்தார். தீர்மானம்
ஏற்கப்படாததால் மாநாட்டை விட்டு வெளியேறினார்.
பார்ப்பனரல்லாதாருக்குச் சுயமரியாதை ஏற்படுத்த ஓர் இயக்கம்
காண வேண்டும் என்ற எண்ணங்கொண்டார். நீதிக்கட்சித்
தலைவர் சர். பிட்டி. தியாகராயர் மறைவுக்கு வருந்தினார்.
1926 சுசீந்திரத்தில் தீண்டப்படாதார் கோவில் நுழைவுக் கிளர்ச்சியை
ஆதரித்துக் குரல் கொடுத்தார். இந்தி புகுத்தப்படுவதால்
வரக்கூடிய கேட்டினை அறிந்து முன்கூட்டியே எச்சரித்தார்.
நாடெங்கும் சுயமரியாதைச் சங்கங்களை நிறுவினார். ஜஸ்டிஸ்
கட்சித் தலைவர்கள் கூட்டிய மதுரை பார்ப்பனர் அல்லாதார்
மாநாட்டில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.
சுயமரியாதை இயக்கம் முகிழ்த்தது
