11. 1905-1908 வயது 26-29 1905-1908 வயது 26-29 பொது வாழ்வில் விருப்பங்கொண்டு மக்கள்
நலப்பணி ஆற்றினார். ஈரோட்டில் பிளேக் நோய் பரவிய போது
மீட்புப்பணி ஆற்றிய துடன், இறந்த சடலங்களை உறவினர்களே
கைவிட்டுச் சென்ற போதும், தன் தோள்மீது சுமந்து சென்று
அப்புறப்படுத்தி அரும்பணி ஆற்றினார். காங்கிரஸ் இயக்கத்தில்
நாட்டங்கொண்டார்.
12. 1909 வயது 30 இளம் விதவையான தனது தங்கையின் மகளுக்கு வயது 30
எதிர்ப்புக்கிடையில் விதவைத்திருமணம் செய்வித்தார்.
13. 1911 வயது 32 தந்தையாரை இழந்தார். வயது 32
14. 1914-1918 வயது 35-39 1914-1918 வயது 35-39 காங்கிரஸ் மாநாடுகளை முன்னின்று
நடத்தினார். ஈரோடு நகர்மன்றத் தலைவராக சிறப்பாகப்
பணியாற்றியதுடன், குடிநீர்த்திட்டம், சுகாதார வசதி போன்ற
பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றினார். ஏறத்தாழ 28
மதிப்புறு பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். ஈரோட்டில்
பெருவணிகராகத் திகழ்ந்தார்.
1919 சமுதாயப்பணி ஆற்றவும், வகுப்புரிமைக் கொள்கையை
நிறைவேற்றிக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாகக் கருதி, காங்கிரசில்
உறுப்பினரானார். நகர் மன்றப் பதவியை விட்டு விலகினார்.
திருச்சி காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தை
முன்மொழிந்தார்.
1920 தான் வகித்துவந்த மதிப்புறு பதவிகள் அனைத்தினின்றும் தானே
விலகினார். வாணிபத்தைத் துறந்து, காங்கிரசின் ஒத்துழையாமை
இயக்கத்தில் ஈடுபட்டு உழைத்தார். திருநெல்வேலி காங்கிரஸ்
மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
மாநாட்டுத் தலைவரால் அனுமதி மறுக்கப்பட்டது.
1921 காந்தியாரின் நிர்மாணத் திட்டத்தை ஏற்று எளிய வாழ்வை
மேற்கொண்டதுடன், ஆடம்பர ஆடையைத்துறந்து கதர்
ஆடையை உடுத்தினார். தன் அன்னையார் உட்பட குடும்பத்தினர்
அனைவரையும் கதராடை அணியச் செய்தார். கதர் மூட்டையைத்
தோளில் சுமந்து, ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்தார்.
ஈரோடு கள்ளுக்கடை மறியலில், தங்கை கண்ணம்மாள், மனைவி
நாகம்மாள் ஆகியோருடன் பங்கேற்றுச் சிறைசென்றார். கள்
உற்பத்திக்குக் காரணமாய் அமைந்தவை என்பதால், தனது
தோப்பில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.
ஒத்துழையாமை இயக்கத்தின் நீதிமன்றப் புறக்கணிப்புக்
கொள்கையின் அடிப்படையில் தன் குடும்பத்துக்கு வரவேண்டிய
பெருந் தொகையை நீதிமன்றத்தின் மூலம் வசூல் செய்ய
நடவடிக்கை எடுக்காமல் இழந்தார். தஞ்சை காங்கிரஸ் மாநாட்டில்
வகுப்புரிமைத் தீர்மானத்தை முன் மொழிந்தார். எனினும் தீர்மானம்
எடுத்துக்கொள்ளப்படாமல் தந்திரமாகத் தடுக்கப்பட்டது.
