1952 கொல்லைப்புற வழியில் முதலமைச்சரான ஆச்சாரியார் குலக்
கல்வித் திட்டத்தினைக் கொண்டுவந்தார். பெரியார்
வெகுண்டெழுந்தார். திருச்சி ரயில் நிலையத்தில் இந்திப்
பெயர்ப்பலகையை தார் கொண்டு அழித்தார். சுயமரியாதைப்
பிரச்சார ஸ்தாபனத்தைப் பதிவு செய்தார். திராவிடர் விவசாய
தொழிலாளர் சங்கங்கள், தென்பகுதி ரயில்வே தொழிலாளர்
யூனியன் போன்றவற்றைத் துவக்கினார்.
1953 சென்னை தமிழ்நாட்டுக்கே சொந்தமானது என்று முழங்கினார்.
நாடெங்கும் கணபதி உருவப் பொம்மையை, புத்தர் விழாக்
கொண்டாடி, பொதுக்கூட்டத்தில் உடைக்கும்படி வேண்டினார்.
தமிழகமெங்கும் பல்லாயிரக்கணக்கான பிள்ளையார்
பொம்மைகள் உடைந்து நொறுங்கின. சுயமரியாதைத் திருமணம்
செல்லாது என்ற நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டு வெகுண்டெழுந்தார்
இரண்டாம் முறையாக ஆகஸ்ட் 1 ஆம் நாளில் ரயில்
நிலையங்களில் இந்திப் பெயர்ப்பலகையை தார்கொண்டு
அழிக்கும் கிளர்ச்சியை நடத்தினார். ஈரோடு
சண்முகவேலாயுதத்தின் “ஈரோட்டுப்பாதை”எனும் வார இதழைத்
துவக்கிவைத்தார்.
1954 மூன்றாம் முறையாக ரயில் நிலையங்களில் உள்ள பெயர்ப்
பலகையில் இந்தி எழுத்துக்களை அழிக்கும் கிளர்ச்சியை
நடத்தினார். ஈரோட்டில் புத்தர் கொள்கை மாநாடு;
குலக்கல்வித்திட்ட எதிர்ப்பு மாநாடு ஆகியவற்றை நடத்தினார்.
நாகையில் திராவிடர் கழக மாநாட்டில் குலக்கல்வி ஒழிப்பு
பிரச்சாரப்படை அமைக்கப்பட்டு பயணம் தொடங்கியது.
குலக்கல்வித் திட்டத்திற்கு நாடெங்கும் எழுந்த எதிர்ப்பினால்
ராஜாஜி பதவி விலகியபின், காமராசர் முதலமைச்சர் ஆனார்.
குலக்கல்வித் திட்டத்தை காமராசர் ஒழித்தார். காமராசர்
ஆட்சியை பெரியார் ஆதரித்தார். பர்மாவில் நடைபெற்ற உலக
பவுத்தர் மாநாட்டில் கலந்து கொண்ட பெரியார் , அங்கு
அம்பேத்கர், இலங்கை புத்தமத அறிஞர் மல்லல சேகரா
ஆகியோரைச் சந்தித்து உரையாடினார். இரண்டாம் முறையாக
மலேயா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நாடெங்கும்
இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரம் நடத்தினார். நடிகவேள்.
எம்.ஆர்.ராதா “இராமாயணம்” நாடகம் நடத்தி இராமனின்
இழிசெயலை அம்பலப்படுத்தினார். இராமாயண நாடகத்தின்
விளைவாக அரசினரால் நாடகத் தடைச் சட்டம்
கொண்டுவரப்பட்டது
