*9**1946 திராவிடர் கழகக் கொடி உருவாக்கப்பட்டு பெரியாரால்
அங்கீகரிக்கப் பட்டது. மதுரையில் நடைபெற்ற கருஞ்சட்டைப்
படை மாநாட்டுப்பந்தல் பார்ப்பனர் தூண்டுதலால் எரிக்கப்பட்டுக்
கலவரம் மூண்டது. இந்திய அரசியல் நிர்ணயசபை
உருவாக்கப்பட்ட முறையைப் பெரியார் எதிர்த்தார்.
1947 ஆகஸ்ட் 15 ‘சுதந்திர நாள்’ அன்று; துக்கநாளே என்று
அறிவித்தார். ஜூலை 1-ஆம் நாள் நாடெங்கும் ‘திராவிட நாடு
பிரிவினை நாள்’ கொண்டாடச் செய்தார். கடலூரில் திராவிட நாடு
பிரிவினை மாநாடு கூட்டினார்.
1948 கருஞ்சட்டைப்படை தடைசெய்யப்பட்டு அடக்குமுறை
ஏவிவிடப்பட்டது. இந்தி மீண்டும் திணிக்கப்பட்டதால்
இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போர் துவங்கியது. கவர்னர் ஜெனரல்
சி. ராஜகோபாலாச்சாரியாருக்குக் கருப்புக் கொடி காட்டியதால்,
கழகத் தோழர்களுடன் கைது செய்யப்பட்டார்.
ஈரோட்டில் பெரியார் கூட்டிய திராவிடர் கழக ஸ்பெஷல்
மாநாட்டில் ‘திராவிட நாடு’ படத்தைத் திறந்து வைத்து திரு.வி.க
விடுதலை முழக்கமிட்டார். தூத்துக்குடியில் பிரசித்திபெற்ற
திராவிடர் கழக மாநாட்டினை நடத்தினார்.
1949 திருக்குறள் மாநாடு நடத்திப் பாமரரும் அந்நூலை அறியும்
வண்ணம் பரப்பினார். திருவண்ணாமலையில் கவர்னர் ஜெனரல்
சி.ராசகோபாலாச்சாரியாரைச் சந்தித்து உரையாடினார்.
மணியம்மையாரை 09.07.1949 இல் திருமணம் புரிந்து கொண்டார்.
உடுமலைப்பேட்டையில் தடை உத்தரவை மீறிக் கைதானார்.
இந்திய அரசமைப்புச்சட்டம் 26.11.1949 இல்
நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்தார். அறிஞர் அண்ணா
திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக்கழகம்
எனும் தனி அமைப்பை ஏற்படுத்தினார்.
1950 ‘பொன்மொழிகள்’என்ற நூலுக்காகச் சிறை ஏகினார். ஜனவரி 26
குடிஅரசு நாளைத் துக்க நாளாகக் கடைப்பிடிக்கக் கோரினார்.
அரசியல் சட்டம் ஒழிக! என்று முழங்கினார். வடநாட்டவர்
துணிக்கடை, உணவுக்கடைமுன் மறியல் செய்தார். வகுப்புரிமை
செல்லாது என்ற நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து திருச்சியில்
வகுப்புரிமை மாநாடு நடத்தினார். மத்திய அமைச்சர்களுக்கு
எதிராகக் கறுப்புக்கொடி பிடித்து எதிர்ப்பைக் காட்டும்படி
அறிவுறுத்தினார். பெரியாரின் தமையனார் ஈ.வெ.கிருஷ்ணசாமி
04.02.1950இல் இயற்கை எய்தினார்.
1951 பெரியாரின் வகுப்புரிமைப் போர் வெற்றிபெற்று, வகுப்புரிமை
வழங்கும் வகையில் இந்திய அரசியல் அமைப்பில் திருத்தம்
செய்யப்பட்டது. கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.ஏ. டாங்கே
திருச்சியில் பெரியாரைச் சந்தித்து உரையாடினார்
