1939 இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் சிறைசென்ற பெரியார்
விடுதலையானார். சிறை மீண்டதும் “திராவிட நாடு
திராவிடருக்கே!” என்று குரலெழுப்பினார்.
1940 நீதிக்கட்சியின் செயலாளர் 1940 சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் மறைவுக்குப்
பெரிதும் துயரடைந்தார். வட இந்தியப் பயணத்தை மேற்கொண்ட
பெரியார் பம்பாயில் ஜின்னாவைச் சந்தித்து உரையாடினார்.
அம்பேத்கரும் உடனிருந்தார். காங்கிரஸ் அமைச்சரவை பதவி
விலகிய நிலையில் மாற்று அமைச்சரவை அமைக்குமாறு கவர்னர்
வேண்டியும், பதவி ஏற்கப் பெரியார் மறுத்தார்.
1941 எம்.என். ராய் சென்னையில் பெரியாரைச் சந்தித்து உரையாடினார்.
பெரியார், முயற்சியால் தென்னிந்திய ரயில்வே உணவு
விடுதிகளில் ‘பிராமணாள்’ ‘இதராள்’என்று ஜாதி பேதம்
காட்டுவது ஒழிந்தது.
1942 தம் 1942 குழுவினருடன் ஸ்
டாபோர்டு கிரிப்சை 30.03.1942 இல் சந்தித்து
தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தினார். இரண்டாம் முறையாக
கவர்னர் வேண்டியும் அமைச்சரவை அமைக்க மறுத்தார்.
1943 பெரியார் அவர்களை அமெரிக்கக் குடியரசுத் தலைவர்
ரூஸ்வெல்ட்டின் பிரதிநிதி, சர். வில்லியம்ஸ் பிலிப்ஸ் சந்தித்து
உரையாடினார். சோதனைக் குழாயில் எதிர்காலத்தில் குழந்தை
உருவாக்கப்படும் என்று சுயசிந்தனையில் தோன்றிய தன் கருத்தை
உலகுக்கு அறிவித்தார். உலகில் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய
மாற்றங்கள் பற்றிய பெரியாரின் சிந்தனைகளை விளக்கும் “இனி
வரும் உலகம்”எனும் நூல் வெளியிடப்பட்டது. தமிழிசை
இயக்கத்தை ஆதரித்துக் குரல் கொடுத்தார்.
1944 சேலம் மாநாட்டில் தென்னிந்திய நல உரிமைச்சங்கம் என்ற பெயர்,
பெரியார் அவர்களால் ‘திராவிடர் கழகம்’ என்று மாற்றப்பட்டது.
இந்து மகாசபைத் தலைவர் மூஞ்சேயைச் சந்தித்து உரையாடினார்.
கல்கத்தாவில் எம்.என்.ராய் அவர்களின் ‘ராடிகல் டெமாக்ரடிக்
கட்சி’ மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். கான்பூரில்
பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் கலந்து
கொண்டார்.
1945 திருச்சியில் திராவிடர் கழக மாகாண மாநாட்டை நடத்தினார்.
கருஞ்சட்டைத் தொண்டர்படை என்ற அமைப்பை
ஏற்படுத்தினார். ஈரோட்டில் ‘ஜஸ்டிசைட்’ என்ற ஆங்கில
இதழைத் துவக்கினார்.
