1960 தமிழ்நாட்டுப் பிரிவினையை வலியுறுத்தி தமிழ்நாடு நீங்கிய
தேசப்படத்தை எரிக்கும் கிளர்ச்சியை நடத்தி சிறை ஏகினார்.
பல்லாயிரவர் தேசப்படத்தைக் கொளுத்தி சிறை சென்றார்கள்.
1961 பொதுத் தேர்தலில் காமராசரை ஆதரிக்க வேண்டும் என்று பொது
மக்களைக் கேட்டுக் கொண்டார்.
சென்சஸ் கணக்கெடுப்பின் போது “நாத்திகர்” என்று கூறும்படி
திராவிடர்கழகத் தோழர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
1962 பொதுத்தேர்தலில், உடல்நலம் குன்றிய நிலையிலும், கடுமையாக
உழைத்து, காமராசருக்கு ஆதரவு திரட்டி வெற்றியைத் தேடித்
தந்தார். சென்னையில் ‘வாக்காளர்’ மாநாட்டை நடத்தினார்.
தோழர் கி. வீரமணி அவர்கள் திராவிடர் கழகத்துக்கு முழுநேரத்
தொண்டராக வர இசைந்தமையறிந்து மகிழ்ந்து, பெரியார்
அவரைப் பாராட்டி ஆகஸ்ட் 10ஆம் நாள் விடுதலையில்
“வரவேற்கிறேன்” என்று தலையங்கம் தீட்டினார்.
1963 கட்சிப்பணிக்காக, முதலமைச்சர் பொறுப்பை விட்டு விலகத்
தீர்மானித்த காமராசருக்கு பெரியார் தனது எதிர்ப்பைத்
தெரிவித்து, அவர் விலகுவது, ‘தமிழருக்கும் தமிழ் நாட்டுக்கும் ,
காமராசருக்கும் தற்கொலையாக முடியும்’ என்று முன் கூட்டியே
தந்தி மூலம் அறிவித்தார். பெரியார் திடலில் ‘ராதா மன்றம்’
திறப்பு விழாவை நடத்தினார்.
1964 நில 1964 உச்சவரம்புச் சட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் அளித்த
தீர்ப்பை எதிர்த்து நாடெங்கும் சுப்ரீம் கோர்ட் கண்டன நாள்
கடைப்பிடிக்க அறிவுறுத்தினார். புரட்சிக்கவிஞர் 21.04.1964இல்
மறைவுக்குப் பெரிதும் வருந்தினார்.
1965 பெரியார் வேண்டுகோளின்படி திராவிடர் கழகத்தினரால்
நாடெங்கும் ‘இராமாயணம்’ கொளுத்தப்பட்டது. பார்ப்பனர்,
பத்திரிகைகாரர்கள் தூண்டுதலின் பேரில் இந்தி எதிர்ப்புப் போரில்
நிகழ்ந்த வன்முறையைக் கண்டித்தார். பெரியார் அளித்த
நன்கொடையால் கட்டப்பட்ட திருச்சி ஈ.வெ.ரா. அரசினர் கலைக்
கல்லூரியை முதலமைச்சர் பக்தவத்சலம் திறந்து வைத்தார்.
1966 சங்கராச்சாரியாரை பகிஷ்கரிக்க அவர் சென்ற இடமெல்லாம்
கருப்புக்கொடி காட்டச் செய்தார். ‘பசுவதை’ என்ற பெயரால்
டில்லியில் காமராசர் வீட்டுக்குத் தீ வைக்க முயன்ற பார்ப்பனக்
கூட்டத்தைக் கண்டித்து, காமராசர் கொலை முயற்சிக் கண்டன
நாள் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தினார்.
