கிடைத்ததில் சம பங்கு
ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண
லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில்
அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து
கொள்வதால் தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம் செய்து நிகழ்ச்சியை நடைபெறா
வண்ணம் தடுத்துவிடுவான்
என எண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக
அரங்கினுள் விட வேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டார் மன்னர்.
இதை அறிந்தான் தெனாலிராமன் எப்படியாவது
அரங்கத்தினுள் சென்று
விடுவது என தீர்மானித்துக் கொண்டான்.
நாடகம் நடைபெறும், அரங்கின் வாயிலை
நெருங்கினான் தெனாலிராமன். உள்ளே செல்ல முற்பட்டான்.
வாயில் காப்பானோ அவனை உள்ளே விட மறுத்து விட்டான்.
மீண்டும் மீண்டும் கெஞ்சினான். வாயிற்காப்போன்
மசியவில்லை.
இந்நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். "ஐயா, வாயிற்காப்போரே என்னை உள்ளே விட்டால் என்னுடைய
திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில்
பாதியை உனக்குத் தருகிறேன்" என்றான். இதைக் கேட்ட வாயிற் காப்போன் முதலில் சம்மதிக்காவிட்டாலும்
பின்னர் கிடைப்பதில் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை
உள்ளே விட்டான்.
அரங்கத்தினுள் செல்ல வேண்டுமானால் மீண்டும்
இன்னொரு வாயிற் காப்போனை சமாளிக்க வேண்டியிருந்தது.
அவனும் தெனாலிராமனை உள்ளே விட மறுத்தான். முதற் வாயிற் காப்போனிடம் சொல்லியதையே இவனிடமும் சொன்னான்.
இவனும் பாதி பரிசு கிடைக்கிறதே என்று
மகிழ்ந்து அவனை உள்ளே விட்டுவிட்டான்.
ஒருவருக்கும் தெரியாமல் தெனாலிராமன் ஓர்
மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான்.
அப்போது கிருஷ்ணன் ஆக நடித்தவன் வெண்ணை திருடி கோபிதைகளிடம் அடி வாங்கும் காட்சி
நடைபெற்றுக் கொண்டிருந்தது. உடனே மூலையில் இருந்த
தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில்
தோன்றி கிருஷ்ணன் வேட்ம் போட்டு நடித்தவனை கழியால் நையப் புடைத்து விட்டான். கிருஷ்ண வேடதாரி
வலி பொறுக்கமாட்டாமல்
அலறினான்.
இதைப்பார்த்த மன்னர் கடுங்கோபமுற்று மேடையில் பெண் வேடமிட்டுள்ள தெனாலிராமனை அழைத்து வரச்செய்தார்
பின் "ஏன் இவ்வாறு செய்தாய்" என வினவினார். அதற்குத்
தெனாலிராமன் "கிருஷ்ணன்
கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான்" இதைக் கேட்ட மன்னருக்கு அடங்காக் கோபம் ஏற்பட்டது. தெனாலிராமனுக்கு 30 கசையடி கொடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு
உத்தரவிட்டார்.
இதைக் கேட்ட தெனாலிராமன் "அரசே இப்பரிசை எனக்கு
கொடுக்க வேண்டாம். ஏனென்றால் எனக்குக் கிடைக்கும்
பரிசை ஆளுக்குப் பாதி பாதி தருவதாக நம் இரண்டு பாயிற்காப்போன்களிடம்
உறுதியளித்து விட்டேன்.
ஆகையால் இப்பரிசினை, அவர்கள் இருவருக்கும்
சமமாகப் பங்கிட்டுக் கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டான்.
உடனே மன்னர் அவ்விரு வாயிற்காப்போன்களையும்
அழைத்து வரச்செய்து இது குறித்து விசாரித்தார்.
அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டார்கள்.
அவ்விருவருக்கும்
தலா 15 கசையடி கொடுக்குமாறு மன்னர் பணித்தார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தைப்
பாராட்டி அவனுக்குப் பரிசு வழங்கனார்.
சோதிடனைக் கொன்ற கதை
ஒரு சமயம் பீஜப்பூர் சுல்தான்
கிருஷ்ண தேவ ராயரின் படை வலிமையைப் பற்றிக் கேள்விப்பட்டான்.ராயர் சுல்தானுடன் போர்
தொடுக்க எண்ணியுள்ளதையும்
அறிந்து கொண்டான்.இதை எப்படியேனும் தடுத்து
நிறுத்த வேண்டும் என்று எண்ணம் கொண்டான்.
அதனால் ஒரு சூழ்ச்சி செய்தான்.அரசர் ஜோதிடத்தில் மிகுந்த
நம்பிக்கை கொண்டவர் என்பதை அறிந்து கொண்டான்.
ரகசியமாக அரண்மனை ஜோதிடரை சந்தித்தான் சுல்தான்.நிறைய பொன்னைக் கொடுத்து
ராயரின் படையெடுப்பை எப்படியாவது தடுத்து நிறுத்துமாறு
கேட்டுக் கொண்டான்.
பொன்னுக்கு ஆசைப்பட்ட அந்த வஞ்சக ஜோதிடன் நேராக விஜயநகர அரண்மனைக்கு வந்தான்.கிருஷ்ணதேவ
ராயர் படையெடுக்கத் தயாராக உள்ளதை அறிந்துகொண்டான்.
அவன் உள்ளம் வேகமாக வேலை செய்தது. மன்னர் முன் சென்று நின்றான்.மிகவும் தயங்குவது
போல் பாசாங்கு செய்தவன் "அரசே! தற்போது தாங்கள் படையெடுப்பது
சரியல்ல.ஏனெனில் தங்களின் கிரகநிலை தற்போது
சரியில்லை.எனவே படையெடுப்பில் தற்போது இறங்க வேண்டாம்." என்று கூறினான். மந்திரி
பிரதானிகளும் அதையே கூறினர். அவர்களும் மன்னரின்
உயிரைப் பெரிதென மதித்தனர்.அரசியரும் மன்னரையுத்தத்திற்குப்
போகவேண்டாம் எனத் தடுத்தனர். அரசரும் யோசித்தார்.தெனாலிராமன் இவற்றையெல்லாம் கவனித்தவண்ணம் இருந்தான்.அவனுக்கு ஜோதிடன் மேல்
சந்தேகம் ஏற்பட்டது.எனவே மன்னனிடம்"அரசே! நீங்கள் ஏன்
தயங்குகிறீர்கள்? சோதிடன்
சொன்ன பலன்கள் எல்லாம் நடந்து விடுகின்றனவா என்ன?" என்று தைரியம் சொன்னான்.
ராயரும் அதை ஆமோதித்தார்."ராமா! நீ சொல்வதும் சரிதான். ஆனால் இதை எப்படி மற்றவர்களுக்கு நிரூபிப்பது?சோதிடம் பொய்
என்று நிரூபிப்பவருக்குபத்தாயிரம்
பொன் பரிசு என்று அறிவியுங்கள்" என்றும் ஆணையிட்டார்.
தெனாலிராமனுக்கு
மிக்க மகிழ்ச்சி.
"அரசே! நானே இதை நிரூபிக்கிறேன். ஆனால் அந்த சோதிடனுக்குத் தண்டனை தருகின்ற உரிமையையும்
எனக்குத் தரவேண்டும்
" என்று கேட்டுக்கொண்டான்.
மன்னரும் இதை ஒப்புக்கொண்டார்.
மறுநாள் சபா மண்டபத்தில் சோதிடனும்
தெனாலிராமனும் எதிரெதிரே
அமர்ந்திருந்தனர். ராமன்
சோதிடரைக் கூர்ந்து கவனித்தான்.அவர் மேல் அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று.
அவன், "சோதிடரே! நீர் கூறும் சோதிடம் தவறாமல் பலிக்குமல்லவா?" என்றான் மெதுவாக.
"அதிலென்ன
சந்தேகம்? நான் சொன்னால் அது கண்டிப்பாக நடந்தேறும்." தன் கரங்களைக் குவித்தபடியே "நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து
பலன்களைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்" என்றான் ராமன் பணிவாக.
சோதிடனும் கர்வத்துடன் தலையை அசைத்துக் கொண்டான்.
"அப்படியானால்
தங்களின் ஆயுள் காலத்தையும் தாங்கள் அறிவீர்கள்
அல்லவா?"
"ஓ!
நான் இன்னும் நாற்பது ஆண்டுகள் உயிர்
வாழ்வேன். இது சத்தியம்." சோதிடன் பெருமையுடன் கூறினான்.
"உமது
வாக்கு இப்போதே பொய்த்து விட்டதே! " என்றவாறே அருகே நின்ற சேனாதிபதியின் வாளை உருவி அந்த வஞ்சக சோதிடனின் தலையை வெட்டினான் ராமன்.
அனைவரின் திகைப்பையும் நீக்கிய ராமன் அந்த சோதிடனின் சுவடிக்கட்டை பிரித்துக் காட்டினான். அதனுள் பிஜாபூர் சுல்தான் சோதிடனுக்கு அனுப்பிய கடிதங்கள் இருக்கக் கண்டான். அந்த சோதிடன் பீஜப்பூர் சுல்தானின் கைக்கூலி என்று அறிந்து அவனுக்குத் தண்டனை அளித்ததற்காக ராமனைப் பாராட்டினார்.தன் வாக்குப் படியே பத்தாயிரம் பொற்காசுகளையும் அளித்து மகிழ்ந்தார். அதன்பின் தன் எண்ணப்படியே பீஜபூரையும் குர்ப்பாகானையும் வெற்றி கொண்டார் கிருஷ்ணதேவராயர்.
