பொது அறிவு வினா-விடைகள்:
-------------------------------------------------
1. இந்தி மொழியை கட்டாய மொழியாக தமிழ்நாட்டில்
அறிமுகப்படுத்தியவர் - இராஜாஜி
2. வ.உ.சி. அரசியலில் ஈடுபட
முக்கியக் காரணமாக அமைந்த நிகழ்ச்சி - வங்கப்பிரிவினை
3. எந்த ஆண்டு காந்திஜி சென்னை மகாஜன சபையில் உரையாற்றினார்? - 1896
4. சென்னை சுதேசி சங்கம் எந்த ஆண்டு சென்னை மகாஜன சபையோடு செயல்பட்டது? - 1884
5. வேலூர் கழகத்திற்கு உடனடி காரணம் - மதம்
6. இந்தியாவின் மிக
உயர்ந்த பீடபூமி - லடாக்
7. ''பசுமை வீடு வாயுக்கள்'' என அழைக்கப்படுவது
- மீத்தேன், நீராவி, குளோரோ புளுரோ கார்பன்
8. களிமண்ணாலும் மென்
பாறைகளாலும் ஆன தொடர்ச்சியற்ற மலைத்தொடர் - சிவாலிக்
9. எது 5-10 வருடங்களுக்கு
ஒருமுறை காணப்படும் நிகழ்வு - எல்நினோ
10. பரந்த வேளாண்மை என்பது - வணிக வேளாண்மை
11. இரும்பு எக்கு
நிறுவனம் 1919-ம்
ஆண்டு அமைக்கப்பட்ட இடம் - பரன்பூர்
12. ''மிகையூட்ட வளமுறுதல்''
என்பது - உர வகை நீரில் கலத்தல்
13. எது மழையின் காற்று மோதா பகுதியில் உள்ள மிகக் குறைந்த மழை பெரும் பகுதி? - மழை மறைவுப் பகுதி
14. பொருட்களைத் தொடாமல்
விவரங்களை சேகரிக்கவும், பதியவும் பயன்படும் கருவி
- தொலை உணர்விகள்
15. வளி மண்டலத்தின் உயர் அடுக்குகளில் காணப்படும்
காற்றோட்டம் - ஜெட்
காற்றோட்டம்
16. முதல் வானிலை செயற்கைக்கோள் - TIROS-1
17. குளிர் காலம் - டிசம்பர் முதல் பிப்ரவரி
18. கோடை காலம் - மார்ச் முதல் மே
19. தென்மேற்கு பருவக்காற்று
- ஜூன் முதல் செப்டம்பர்
20. வடகிழக்குப் பருவக்காற்று - அக்டோபர் முதல் நவம்பர்