பூரம் நட்சத்திரம் பற்றி அறியலாம் !!!
பூரம் நட்சத்திரம், வானில் வெண்மை நிறத்திலான இரண்டு நட்சத்திரங்களைக்
கொண்ட கூட்டமைப்பாகும்.
சமஸ்கிருதத்தில் பூரம்
நட்சத்திரத்தை பூர்வ
பல்குனி என்றும் வழங்கப்படுகிறது. பூர்வ பல்குனி என்றால் பாராட்டுக்குரியது
அல்லது சிறப்புடையது என்று பொருள் . பூரம்
நட்சத்திரத்திற்கு தமிழில்
வேறு பெயர்கள்- கணை, எலி, பகவதி. பூரம் நட்சத்திரத்தின் வடிவங்கள் கண்கள், கட்டில் கால்
, சதுரம்.
காலபுருஷ தத்துவத்தில் ஐந்தாவதாக ராசியான சிம்மத்தில் பூரம்
நட்சத்திரம் முழு நட்சத்திரமாக இருக்கிறது. சுக்கிரன்
இதன் அதிபதி. இது ஒரு பெண் நட்சத்திரம்.
நட்சத்திர தேவதை: அர்யமான் ( புகை
நிற மேனியை உடையவர் ,சக்தி ஆயுதத்தை ஏந்தியவர்). இதன் விருட்சம் புரசு எனும் பலாச மரம்.
தெய்வம் - அன்னை பார்வதி , ஸ்ரீஆண்டாள்
.
ஜாதகத்தில் ஏதேனும் ஒரு கிரகம் பூரம் நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தால் அந்த கிரகம் குறிக்கும் உறவிற்கு
கீழ்க்கண்ட
குணாதிசயம் / பண்புகள் இருக்கும்.
சூரியன் வீட்டில் அமர்ந்து உள்ளதால்
இவர்களுக்கு தலைமைப்பண்பு ஒரு கம்பீரம் , அனைவரையும்
கவரும் தோற்றம், சுக போகத்துடன் வாழ்வு
செல்வம்-வீடு , வாகனம், ஆபரணங்கள் , பணம்
சேர்க்கை , இசை பாடுவதில் வல்லமை, தன்னை
அழகாக அலங்கரித்துக் கொள்வார்.
ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் பூர
நட்சத்திரத்தில் இருந்தால்… மனைவி, மகள் மேற்கண்ட குணாதிசயங்களை
கொண்டிருப்பர். பெண்
எனில் ஜாதகிக்கு மேற்கண்ட குணாதிசயங்கள் இருக்கும்.
நன்றி
பத்மபிரியா பிரசாத்