
ஸ்ரீ குருப்யோ நமஹ!!!
சமையலறை!!
வீட்டில் சமையலறையை குறிக்கும் கிரகம்
- சுக்கிரன்
சுக்கிரன் - ராகு
-----------------------------
சமையலறை மிகவும் பெரியதாக இருந்ததால்
அது ராகுவின் அம்சமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. சுக்கிரன் - ராகு சேர்க்கை வீட்டில வீட்டில் வசிக்கும் பெண்களுக்கு
( மனைவி, மகள்) உடல் நலக்கோளாறு முக்கியமாக கர்ப்பப்பை
கோளாறு ஏற்படக்கூடும்.
சுக்கிரன்- சனி
---------------------------
பொருட்கள் சேமிக்கும் இடம் சனியின் ஆதிக்கம்
கொண்டதாகும். சமையலறையிலே பொருட்களை சேமிக்கும் பகுதி
இருந்தால் அது சுக்கிரன்- சனி சேர்க்கையாக எடுத்துக் கொள்ளலாம்.
உணவு அருந்தும் இடமும் சனி ஆதிக்கம் உள்ளது. சமையலறையிலே
உணவருந்தும் பகுதி அமைந்து இருந்தால் , சுக்கிரன்-
சனி சேர்க்கையாகிறது.
மேற்கண்ட சேர்க்கை லக்ஷ்மி யோகத்தை கொடுக்ககூடியது. இவ்வாறு அமைப்பு இருக்கும் வீட்டில்
நல்ல பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
சுக்கிரன் - செவ்வாய்
---------------------------------------
சமையலறையை
ஒட்டி படுக்கையறை இருந்தால் சுக்கிரன்- செவ்வாய்
சேர்க்கை என எடுத்துக்கொள்ள வேண்டும். மனைவி - கணவன் ஒற்றுமை ஓங்கும்
.
சுக்கிரன்- சந்திரன்
-----------------------------------
சமையலறையில் தண்ணீர் ஒழுகிக் கொண்டே
இருப்பதை தவிர்க்க வேண்டும் . இது சுக்கிரன்-சந்திரன்
சேர்க்கையை கொடுக்கக்கூடியது.
பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சினைகள் வரக்கூடும். பணம்
தண்ணீர் போல் கரையும்.
சுக்கிரன்-கேது
---------------------------
சமையலறையில் தலைமுடி உதிர்ந்தால் உடனே அப்புறப்படுத்துங்கள்.
தலைமுடி என்பது கேதுவை குறிக்கும்.
சுக்கிரன்- கேது சேர்க்கை அவ்வீட்டு
பெண்களுக்கு மன விரக்தி ஏற்படும். காரணமாகும்.
பண சுழற்சி தடை செய்யும்.
சுக்கிரன் - குரு
----------------------------
சமையலறையில் பூஜை அறை அமைந்தால், சமையல் அறையை ஒட்டி பூஜை அறை இருந்தாலும் சுக்கிரன் - குரு சேர்க்கையை கொடுக்கும். இந்த அமையும் உள்ள
வீட்டில் பொன் - பொருள் சேமிப்பு இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்கு
அமையும்.
நன்றி
பத்மப்ரியா பிரசாத்