31. தவறாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக.
A. முதலாவது நீதிபதிகள் வழக்கு-1972
B. இரண்டாவது நீதிபதிகள் வழக்கு-1993
C. மூன்றாவது நீதிபதிகள் வழக்கு-1998
D. நான்காவது நீதிபதிகள் வழக்கு-2015
32. பின்வரும் வழக்குகளில் எது அடிப்படை உரிமைகள் வழக்கு என்றும் அழைக்கப்படுகிறது?
A. தி கிஹோட்டோ ஹோலோ ஹோன் வழக்கு -1993
B. இந்திரா சாஹ்னி வழக்கு-1992
C. கேசவானந்த பாரதி வழக்கு-1973
D. எஸ் ஆர் பொம்மை வழக்கு-1994
33. நீதிபதிகள் விசாரணை சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?
A.1950
B.1956
C.1968
D.1973
34. லோக் அதாலத் பற்றிய தவறான கூற்றை காண்க.
A. இதன் பொருள் மக்கள் நீதிமன்றம் என்பதாகும்
B. இந்த அமைப்பு காந்திய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது
C.சுதந்திர இந்தியாவின் முதல் லோக் அதாலத் முகாம் குஜராத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது
D. இதற்கு 1982 இல் சட்டரீதியாக அந்தஸ்து வழங்கப்பட்டது
35.பிரிட்டிஷ் மேலவை கவுன்சிலின் இடத்தில் அகில இந்திய இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நிறுவுவதன் அவசியத்தை உணர்ந்த இந்திய சட்ட வரலாற்றில் முதல் நபர் யார்?
A. பி ஆர் அம்பேத்கர்
B. சர் ஹரி சிங் கௌர்
C. சத்தியேந்திர நாத் தாகூர்
D. ராஜேந்திர பிரசாத்
36. அடிப்படை உரிமைகளின் தேசிய நெருக்கடி நிலையின் நிலையை விவரிக்கும் சரத்தை எது?
A. சரத்து 358
B. சரத்து 359
C. சரத்து 360
D. A மற்றும் B
37. கூட்டமைப்பு என்ற சொல் லத்தீன் வார்த்தையான ஃபோடஸ் என்பதிலிருந்து உருவானது.ஃபோடஸ் என்பது ....….. ஆகும்?
A. அனைத்தும்
B. ஒப்பந்தம்
C. சேர்க்கை
D. கொள்கை
38.42 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாநில பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்படாத துறை எது
A. கல்வி
B. வனங்கள்
C. எடைகள் மற்றும் அளவுகள்
D. மின்சாரம்
39.மாநிலங்கள் அவையில் ஒரு மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு இருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை....... பொறுத்து அமையும்?
A. ஆட்சிப்பகுதி
B. எழுத்தறிவு
C. மக்கள் தொகை
D. அரசியல் கட்சி
40. நீதிமன்ற அவமதிப்புச் சட்டம்...... ஆண்டு இயற்றப்பட்டது?
A.1991
B.1971
C.1981
D.1961