சட்டம்: ஒரு சட்ட முன்வரைவு
நாடாளுமன்றத்தில் ஈரவைகளிலும்
ஏற்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதல்
பெறும் ப�ோது சட்டம் எனப்படுகிறது.
சட்ட முன்வரைவு: நாடாளுமன்றத்தில்
ஈரவைகளின் ஏற்பு கோரி
முன்மொழியப்படும் சட்ட வரைவு சட்ட
முன்வரைவு எனப்படும்.
உட்பிரிவு: ஒரு சட்ட முன்வரைவில் வரிசை
எண்ணிடப்பட்ட பத்தி.
தீர்மானம்: நாடாளுமன்றத்தின் தீர்வு,
நடவடிக்கை, கருத்து கோரி
நாடாளுமன்றத்தில் எந்தவொரு
உறுப்பினராலும் முன்வைக்கப்படுவது
தீர்மானம் எனப்படும்
பதவி பிராமணம்: புதிதாகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற
உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில்
அமரும்முன் இந்திய அரசமைப்பிற்கும்
நாட்டின் இறையாண்மை மற்றும்
ஒருமைப்பாட்டிற்கும் தமது
உறுதிப்பாட்டினைத் தெரிவித்து கடவுள்
பெயராலோ, பகுத்தறிவின் பெயராலோ
உறுதி மொழி ஏற்றுக் கொள்வதாகும்.
கேள்வி நேரம்: ஒவ்வொரு நாளும் அவை
தொடங்கியதும் முதல் ஒரு மணி நேரம்
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு
ஒதுக்கப்படுகிறது.
கோரம்: நாடாளுமன்ற அவை அல்லது
பல்வேறு பணிகளுக்காக உருவாக்கப்படும்
குழுக்களின் கூட்டத்தொடர் குறைந்தபட்சம்
இருக்க வேண்டிய உறுப்பினர்களின்
எண்ணிக்கை கோரம் எனப்படுகிறது.
அவையின் மொத்த உறுப்பினர்களில்
பத்தில் ஒரு பங்கு உறுப்பினர்களின்
எண்ணிக்கை கோரம் என
வகுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தொடர்: ஆண்டுக்கு மூன்று முறை
நாடாளுமன்றம் குடியரசுத்தலைவரால்
கூட்டப்படுகிறது. நாடாளுமன்றம்
செயல்புரியும் குறிப்பிட்ட கூட்டத்தின் கால
அளவு கூட்டத்தொடர் எனப்படும்.
நிலைக்குழு: ப�ொதுவாக ஒவ்வொரு
ஆண்டும் அல்லது அவ்வப்போது
அவையால் தேர்ந்தெடுக்கப்படும் அல்லது
அவைத் தலைவரால் நியமிக்கப்படும் குழு
நிலைக்குழு எனப்படும்.
அரசு: மத்திய அரசாங்கம், இந்திய
நாடாளுமன்றம், மாநில அரசாங்கங்கள்,
மாநிலச் சட்டமன்றங்கள், இந்திய
எல்லைக்குள் வரும் அனைத்து உள்ளூர்
அதிகார அமைப்புகள், இந்திய
அரசாங்கத்தின் கட்டுபாட்டின் கீழ்
இயங்கும் அமைப்புகள் இவை
அனைத்தையும் உள்ளடக்கியது அரசு
ஆகும்.
